பிரிட்டன் கடற்கரையில் நூற்றுக்கணக்கில் கரையொதுங்கும் ஜெல்லி மீன்கள்! அச்சத்தில் மக்கள்

பிரித்தானிய கடற்கரையில் நூற்றுக்கணக்கில் ஏலியன் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கியிருக்கின்றமை பிரிட்டன் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அசாதாரண காலங்களில் மட்டுமே இப்படி நடக்கும் என்றும், இவ்வாறு ஏலியன் ஜல்லி மீன்கள் கரை ஒதுங்கியிருப்பது பேரழிவுக்கான அறிகுறியாக இது இருக்கலாம் எனவும் மக்கள் அச்சமடைந்திருக்கின்றனர்.

பிரிட்டனில் நிலவும் கடும் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக, பிரிட்டன் கடற்கரையில் ஏலியன் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கியிருக்கின்றன. இவ்வாறு கரை ஒதுங்கியுள்ள இந்த ஜெல்லி மீன்கள் பார்ப்பதற்கு ஏலியன்கள் மாதிரி இருப்பதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், “இந்த வகை மீன்கள் ‘வெலெல்லா வெலெல்லா’ என அழைக்கப்படுகின்றன. கடல் பட்டம் என்றும் இது அழைக்கப்படுகிறது. வடமேற்கு பிரிட்டனின் கும்பிரியா பகுதியில் உள்ள செயின்ட் பீஸ் பீச் மற்றும் வேல்ஸ் பீச்சில் தற்போது இவை அதிக அளவில் கரை ஒதுங்கியிருக்கின்றன.

டார்க் ப்ளூ கலரில் இருப்பதால் மக்கள் கிட்ட நெருங்கவே பயப்படுகின்றனர். பார்ப்பதற்கு ஜல்லி மீன்கள் போன்று இருந்தாலும், இது ஜல்லி மீன்கள் கிடையாது. ஒருவகை சிறிய உயிரினம். இது மேன் ஓ வார் என்கிற ஆபத்தான உயிரினத்துடன் தொடர்புடையது.

எனவே இவற்றை தொட கூடாது. மீறி தொட்டால் கடுமையான வலியும், எரிச்சலும் ஏற்படும். இந்த வகை உயிரினங்களால் நீந்த முடியாது.

கடலின் அலைக்கு ஏற்ப நகர்ந்து செல்லும். தற்போது இதன் இனப்பெருக்கம் அதிகமாக இருப்பதால், அதிக அளவில் கரை ஒதுங்கியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles