ஈரான் ராணுவம் குறித்த தகவல்களை சேகரித்த 21 இஸ்ரேலிய உளவாளிகள் கைது செய்யப்பட்டனர் எனஈரானிய அரசு அறிவித்துள்ளது.
ஈரானின் தென்கிழக்கு மாகாணமான கெர்மனில், இஸ்ரேலிய உளவுப்பிரிவான மொசாத் அமைப்பிற்காகச் செயல்பட்ட கூலிப்படையைச் சேர்ந்த 21 பேர் அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 21 பேரும் ஈரான் ராணுவம் குறித்த தகவல்களைச் சேகரித்து மொசாத் உளவாளிகளுக்கு அனுப்பினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள இஸ்ரேலிய உளவாளிகளுக்கான தண்டனை குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
முன்னதாக, 2026 ஜனவரி முதல் ஈரானில் 52 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
