அமெரிக்காவில் பரிதாபமாக உயிரிழந்த இந்திய வம்சாவளி மாணவன்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற பிக் பைன் லேக்ஸ் மலைப்பகுதிக்கு தனியாக மலையேற்றத்திற்கு சென்ற 26 வயதுடைய இந்திய வம்சாவளி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது உடல் அங்குள்ள ஏரி ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

கடந்த ஓகஸ்ட் முதலாம் திகதி, கலிபோர்னியாவின் சியரா நெவாடா பகுதியில் உள்ள பிக் பைன் லேக்ஸ் மலைப்பாதையில் குறித்த மாணவன் தனியாக மலையேற்றத்தில் ஈடுபட்டார்.

அன்று இரவு 8:30 மணியளவில் தனது குடும்பத்தினருக்கு ஜி.பி.எஸ் மூலம் தனது இருப்பிடத்தை கடைசியாக அனுப்பியுள்ளார். அதன் பிறகு, அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லை.

இதைத் தொடர்ந்து, ஹெலிகாப்டர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் மீட்புக்குழுவினர் தேசிய வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

இரண்டு நாட்கள் தீவிரமாக தேடிய நிலையில், அங்குள்ள ஒரு ஏரியில் விக்ரம் முபாயியின் சடலமாக மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles