பொஸ்னியாவின் வடக்குப் பகுதியில் நேற்று நடைபெற்ற ஹெலிகாப்டர் வீழ்ந்த நொறுங்கி விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர். மேலும் 11 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் அமைதிப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இத்தாலிய CH-47 சினூக் ரக ஹெலிகாப்டரானது, பிர்கோ நகரைச் சுற்றியுள்ள பகுதியில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் முழுமையான மற்றும் விரிவான” விசாரணை நடைபெற்று வருவதாகவும், கூடுதல் தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் என்றும் EUFOR கூறியுள்ளது.
