கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் அவசரகாலநிலை அறிவிப்பு

கனடா முழுவதும் வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீ காரணமாக பிரிட்டிஷ் கொலம்பியாவின் சம்மர்லேண்ட் மாவட்டம் இன்று அவசரகால நிலையை அறிவித்தது.

இதனால் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

சுமார் 5,000 ஹெக்டேயர் பரப்பளவிற்கு அதிகமான நிலம் காட்டுத்தீக் காரணமாக சேதமடைந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் சம்மர்லேண்ட் மாவட்டத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் கொதித்தாரிய நீரை பருகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

காட்டுத்தீ அச்சுறுத்தல் காரணமாக நீர் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ளமையால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டில், கனடாவின் ஒன்டாரியோ மற்றும் கியூபெக் உள்ளிட்ட பல பிராந்தியங்கள், வெப்பமான, வறண்ட வானிலையுடன் போராடி வருகின்றன. இதனால் இப்பகுதிகளில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles