ரஷ்யாவிலிருந்து எரிபொருள்களை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு 100 சத வீத வரி – அமெ. செனட் சபையில் நிறைவேறிய சட்டமூலம்

ரஷ்யா மீது பொருளா​தா​ரத் தடை விதிக்​கும் சட்டமூலம் அமெரிக்க செனட் சபை​யில் நிறைவேற்​றப்​பட்​டுள்​ளது. ரஷ்​யா​விடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்​ணெய் மற்​றும் இயற்கை எரி​வா​யுவை இறக்​குமதி செய்​யும் நாடு​களுக்கு 100 சதவீத வரி விதிக்க அதி​காரம் அளிக்​கும் புதிய தடைகள் சட்டமூலத்துக்கு அமெரிக்க செனட் சபை நேற்று முன்​தினம் ஒப்​புதல் அளித்​துள்​ளது.

இந்த சட்டமூலத்துக்கு லிண்ட்சே ஓ.கிரஹாம் ரஷ்யா மற்​றும் ஈரான் தடைகள் சட்​டம் 2026 என்று பெயரிடப்​பட்​டுள்​ளது. அமெரிக்​கா​வில் நேற்று முன்​தினம் செனட் சபை​யில் 86-11 என்ற வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் இந்த சட்டமூலம் நிறைவேற்​றப்​பட்​டுள்​ளது.

ரஷ்​யா​வின் ஆற்​றல் வளங்​களை அதி​கம் வாங்​கும் முதல் 5 நாடுகளை இலக்​காகக் கொண்டு இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்​ளது. இதில் இந்​தி​யா, சீனா, அஜர்​பைஜான், ஹங்​கேரி, ஸ்லோ​வாக்​கியா ஆகிய நாடு​கள் இடம்​பெற்​றுள்​ளன. உக்​ரைன் மீதான போரை நிறுத்​து​வதற்​கும், ரஷ்​யா​வுக்​கான நிதி ஆதா​ரங்​களை முடக்​கு​வதற்​கும், இந்த நாடு​களின் ஏற்​றுமதி பொருட்​கள் மீது 100% வரை வரி​களை விதிக்க அமெரிக்க அதிபர் டொனாட் ட்ரம்ப்​புக்கு இம்​மசோதா முழு அதி​காரம் அளிக்​கிறது.

இந்​தி​யா, சீனா உள்​ளிட்ட பொருட்​கள் அமெரிக்​கா​வில் இறக்​குமதி செய்​யப்​படும்​போது அந்​தப் பொருட்​களுக்கு 100 சதவீத வரி​வி​திக்​க​வும் இந்த மசோதா வழி​வகை செய்​கிறது.

அமெரிக்கா​வுக்கு இந்​தியா ஏற்​றுமதி செய்​யும் பொருட்​களுக்கு 100% வரி விதிக்​கப்​பட்​டால், இந்​தி​யப் பொருட்​களின் விலை உயர்ந்து அமெரிக்​கச் சந்​தை​யில் கடும் போட்​டியைச் சந்​திக்க நேரிடும்.

 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles