முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வீதியில் 46ம் கட்டை பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை புதுக்குடியிருப்பு நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி பனை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் அதில் பயணம் செய்த இளைஞனும் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதே பின்னாலிருந்து பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.
மரணமடைந்தவர் முல்லைதீவு சிவநகர் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞன் என தெரிவிக்கப்படுகிறது.
முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதிக வேகமே இந்த விபத்து இடம்பெற காரணம் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
