சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் உள்ள சோஃபா தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பாங்களாதேஷ் புலம்பெயா் தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.
ரியாத்தில் உள்ள மூசா சனையா தொழிற்பேட்டையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தத் தீ விபத்து நிகழ்ந்தது. விபத்து குறித்து பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சகம் நிலைமையைக் கண்காணித்து வருகிறது.
உயிரிழந்தவா்களின் உடல்களைத் தாயகம் கொண்டுவருவதற்கான அனைத்து நடைமுறைகளையும் சவூதி அதிகாரிகளுடன் இணைந்து ரியாத்தில் உள்ள வங்கதேச தூதரக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனா்.
சவூதி அரேபியாவில் சுமாா் 35 லட்சம் பங்களாதேசத்தவர்கள் வசித்து வருகின்றனா். பங்களாதேஷ் புலம்பெயா் தொழிலாளா்கள் அதிக அளவில் பணியாற்றும் நாடாக சவூதி அரேபியா திகழ்கிறது. கடந்த ஆண்டு மட்டும் அங்குள்ள தொழிலாளா்கள் 270 கோடி டொலருக்கும் அதிகமான தொகையை பங்களாதேஷூக்கு அனுப்பியுள்ளனா்.
