சி.ஐ.டியில் 2 மணிநேரம் வாக்குமூலம் அளித்தார் யோஷித ராஜபக்ச

வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வரான யோஷித ராஜபக்ச குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து சற்றுமுன்னர் வெளியேறியுள்ளார்.

அவர் குறித்த திணைக்களத்தில் இன்று (12) முற்பகல் சுமார் 10 மணியளவில் முன்னிலையானார்.

இந்நிலையில் 2 மணித்தியாலயங்களுக்கும் அதிக நேரம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர், அங்கிருந்து அவர் வௌியேறியுள்ளார்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று (12) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஜனாதிபதியின் செலவுத் தலைப்பின் கீழ் இரண்டு சம்பளங்களைப் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். பின்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவரது விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டிருந்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles