பிரேசில் ஜனாதிபதி தேர்தலில் முறைகேடு நடந்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சந்தேகத்தை எழுப்பி உள்ளார்.
மேரிலாந்தில் நிருபர்களிடம் பேசிய ட்ரம்ப், “பிரேசில் தேர்தலில் நான் எந்தப் பக்கமும் சாயவில்லை. நான் யாரையும் ஆதரிக்கவில்லை. ஆனால் வெளிப்படையாக சொன்னால் இது மீண்டும் ஒரு முறைகேடான தேர்தல் போலவே தோன்றியது தேர்தல்கள் எந்தச் சந்தேகத்திற்கும் இடமின்றி இருக்க வேண்டும்.
ஆனால் இந்த தேர்தல் எனக்கு மிகவும் மோசமான ஒன்றாகவே தெரிகிறது. வாக்குகள் கணக்கிடப்பட்ட விதம், வாக்குபதிவுக்கு நேர நீட்டிப்பு ஆகியவை மிகவும் மோசமான தோற்றத்தையே ஏற்படுத்தியது என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார்.
இதன்போது, பிரேசில் தேர்தல் குறித்து ஏதாவது செய்வீர்களா என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், நான் பிரேசிலை ஆளவில்லை. நான் அமெரிக்காவை ஆளுகிறேன்.
லூலாவுடன் தனக்கு நல்லுறவு இருப்பதாக தெரிவித்தார். இந்நிலையில், ட்ரம்பின் கூற்று முற்றிலும் தவறானது என்றும் ஆதாரமற்ற பேச்சு என்றும் பிரேசில் துணை ஜனாதிபதி ஜெரால்டோ ஆல்க்மின் தெரிவித்துள்ளார்.
