12,000 ‘பாலியல் அச்சுறுத்தல்’ அழைப்புகள் : ஆஸ்திரேலியாவில் இளைஞன் கைது

ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள பெண்களை இலக்கு வைத்து, அவர்களுக்கு பாலியல் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் 12,000 இற்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்ட 27 வயது நபரை வடக்கு பிராந்திய காவல்துறையினர் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காவல்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த அத்துமீறல் சம்பவம் நடப்பு ஆண்டின் ஜூன் 19 அன்று தொடங்கினாலும், ஒரு மாதத்திற்குப் பிறகே காவல்துறைக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

“குறிப்பிட்ட தொலைபேசி எண் அலிஸ் ஸ்பிரிங்ஸ் (Alice Springs) பகுதியில் இருப்பதை அடையாளம் கண்ட பிறகு, ஜூலை 29 அன்று காவல் துறையிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்தத் தொலைபேசி எண்ணிற்குப் பின்னால் இருந்த அலிஸ் ஸ்பிரிங்ஸைச் சேர்ந்த நபரைக் காவல்துறையினர் நேற்று அடையாளம் கண்டு கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த கைபேசியையும் பறிமுதல் செய்தனர்.

தகவல்தொடர்பு சேவையைப் பயன்படுத்தித் தொல்லை தருதல், அச்சுறுத்துதல் அல்லது குற்றச்செயலில் ஈடுபடுதல் ஆகிய ஐந்து கொமன்வெல்த் சட்டப் பிரிவுகளின் கீழ் அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள அவர், இன்று அலிஸ் ஸ்பிரிங்ஸ் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

பாதிக்கப்பட்ட வேறு ஏதேனும் பெண்கள் இருந்தால் தைரியமாக முன்வந்து முறைப்பாடு அளிக்குமாறு வடக்கு பிராந்திய காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

“இந்தச் சம்பவத்தில் மேலும் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது” என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles