கனடாவில் இடம்பெற்ற விபத்தில் பெண் பலி!

கனடாவின் லண்டன் நகரில், வெட்டரன்ஸ் மெமோரியல் பார்க்வே மற்றும் பிராட்லி அவென்யூ சந்திப்பில் கடந்த வெள்ளிக்கிழமை நேரிட்ட கொடூர கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் என லண்டன் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

முன்னதாக, இந்த விபத்தில் படுகாயமடைந்த நான்கு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், விபத்துக்குள்ளான வாகனங்களில் ஒன்றில் பயணித்த பெண் பயணி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக காவல்துறை தற்போது தெரிவித்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மற்ற மூன்று பேரின் தற்போதைய நிலை குறித்த விவரங்களை காவல்துறை வெளியிடவில்லை.

ஆகஸ்ட் 14, 2026 அன்று இரவு 9:20 மணி முதல் 9:40 மணி வரை இந்த பகுதியில் பயணித்தவர்கள், விபத்தை நேரில் பார்த்த சாட்சிகள் அல்லது தங்களது வாகன டேஷ்கேம், வீடுகள் மற்றும் கடைகளின் கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் வைத்துள்ள பொதுமக்கள் லண்டன் காவல் துறைக்கோ அல்லது ‘கிரைம் ஸ்டாப்பர்ஸ்’ அமைப்பிற்கோ உடனடியாகத் தொடர்பு கொண்டு தகவல் அளிக்குமாறு புலனாய்வு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles