கனடாவில் 16 வயதுச் சிறுமி சுட்டுக்கொலை: பொலீஸார் தீவிர விசாரணை

கனடாவின் எட்மண்டன் நகரில் உள்ள 139 அவென்யூ மற்றும் 32 ஸ்ட்ரீட் பகுதிக்கு அருகில் 16 வயதுச் சிறுமி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பொலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அப்பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் பொலிஸூக்கு தகவல் கிடைத்தது. உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், தீவிர காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த 16 வயதுச் சிறுமியைக் கண்டறிந்தனர்.

பொலீஸார் அச்சிறுமிக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தனர். எனினும், அவசர மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தடைந்தபோது அச்சிறுமி உயிரிழந்துவிட்டார் என அறிவிக்கப்பட்டது.

இச்சம்பவத்தை மர்ம மரணமாகக் கருதி எட்மண்டன் பொலீஸின் கொலை வழக்கு விசாரணைப் பிரிவு விசாரணையைக் கையில் எடுத்துள்ளது.

மரணத்திற்கான பின்னணி மற்றும் சூழ்நிலைகளைக் கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கூடுதல் விவரங்கள் கிடைக்கும் பட்சத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles