தேனிலவு சென்ற இளம் பிரிட்டிஷ் தம்பதியினரும் அவர்களது விமானியும் ஹெலி விபத்தில் உயிரிழந்தனர் என கிரேக்க காவல்துறை தெரிவித்துள்ளது.
கிறீஸ் சிஃப்னோஸ் தீவில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை நடந்த ஹெலி விபத்தில், புதுமணத் தம்பதிகளான அலெக்சாண்டர் குரோமி மற்றும் மேரி எபர்ட் ஆகியோர் தங்களது தேனிலவுக்காக கிறீஸில் இருந்தனர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தனியார் ஹெலி தரையிறங்கும் தளத்திலிருந்து சில மீற்றர் தொலைவில் விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த இருவரும் மற்றும் அவர்களது கிரேக்க நாட்டவரான விமானியும் உயிரிழந்தனர்.
அந்தத் தம்பதியினர், எதென்ஸுக்கு அருகிலுள்ள மார்கோபோலோ கிராமத்திலிருந்து பிரபலமான விடுமுறைத் தீவுக்கு ஹெலிகாப்டரில் சென்றனர் என கூறப்படுகிறது.
கிறீஸின் விமானப் பாதுகாப்பு ஆணையம், இந்த விபத்து குறித்து விசாரித்து வருவதாகவும், அதன் புலனாய்வாளர்கள் ஆதாரங்களை சேகரிக்கவும் சாட்சிகளிடம் பேசவும் செவ்வாயன்று சம்பவ இடத்திற்குச் செல்லவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன
