கனடாவில் மர்மான முறையில் சிறுமி உயிரிழப்பு – சந்தேகத்தில் சிறுவன் கைது

கனடாவின் எட்மண்டன் நகரில் 16 வயது சிறுமியான ஜாஸ்மின் தீசி என்பவரின் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்தமை தொடர்பாக பொலிஸார் சிறுவனை ஒருவனை கைதுசெய்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 139 அவென்யூ மற்றும் 32 ஸ்ட்ரீட் பகுதிக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகத் தகவல் கிடைத்ததையடுத்து, அங்கு படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஜாஸ்மின் தீசி உயிரிழந்தார்.

அவர் தனது நண்பரைப் பார்க்கச் சென்றிருந்தார் என குடும்பத்தினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டுள்ள சிறுவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை எட்மண்டன் பொலிஸார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

அல்பெர்ட்டா தலைநகரில் நடைபெற்ற 121ஆவது வருடாந்த உச்சிமாநாடு மற்றும் காவல் வர்த்தகக் கண்காட்சியில் செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களிடம் பேசிய பொலிஸ் தலைமை அதிகாரி வாரன் டிரைஷல், கைது செய்யப்பட்ட நபருக்கு 16 வயது என்று தெரிவித்தார்.

புதன்கிழமை உடற்கூறாய்வு செய்யப்பட உள்ளதாகவும், அதன்பின்னரே கூடுதல் தகவல்கள் வெளியிடப்படும் என்றும் எட்மண்டன் காவல் துறை தெரிவித்துள்ளது.

எட்மண்டனில் சிறுவர்களிடையே வன்முறைகள் அதிகரித்து வருவதாகவும், அதற்குப் பதிலளிக்கும் விதமாகச் சிறுவர்களுக்கான சிறப்புத் திட்டங்களை அதிகரித்து வருவதாகவும் காவல் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles