ஹரியும் மேகனும் அமெரிக்காவில் இருந்து பிரித்தானியாவிற்கு இடம்பெயர திட்டம்

சசெக்ஸ் கோமகனும் கோமகியும் இந்த மாத இறுதியில் தமது குடும்பத்துடன் பிரித்தானியாவிற்கு இடம்பெயர திட்டமிட்டுள்ளனர் என தகவல்கள் வௌியாகியுள்ளன.

‘தி டெய்லி டெலிகிராஃப்’ பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஹரியும் மேகனும் லண்டனுக்கு அருகில் உள்ள தனியார் இல்லத்தில், (அரச குடும்பம் சாராத இல்லத்தில்) வசிக்க உத்தேசித்துள்ளதாக கூறப்பட்டடுள்ளது.

இந்தத் தம்பதியரின் குழந்தைகளான இளவரசர் ஆர்ச்சி மற்றும் இளவரசி லில்லிபெட், செப்டம்பர் மாதம் பிரித்தானிய பாடசாலையொன்றில் தங்கள் படிப்பைத் தொடங்க உள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த இடமாற்றம் குறித்து மன்னர் சார்லஸுக்குத் தெரிவிக்கப்பட்டதுடன், தனது குடும்பத்தினரை மேலும் சந்திக்கும் இந்த வாய்ப்பை அவர் வரவேற்பதாகவும் கூறப்படுகிறது.

அவர்கள் இங்கிலாந்துக்குத் திரும்பிய பிறகும், தனிநபர்கள் என்ற தம்பதியரின் தகுதியில் எந்த மாற்றமும் இருக்காது எனவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles