பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள பல்கலைக்கழகத்தின் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பிரதமர் கலந்துகொள்ளவுள்ளார்.
இதன்போது யாழ்ப்பாணத்தின் கல்வி மற்றும் அபிவிருத்தி தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தற்போது நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் நல்லூர் ஆலயத்திற்கு விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
