ஈரான்மீது பொருளாதாரத் தடை: சீனாவிடம் அமெரிக்கா விடுத்துள்ள கோரிக்கை

சீனா உள்ளிட்ட ஈரானின் முக்கிய வர்த்தகப் பங்காளிகளைப் பாதிக்கும் வகையில், புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவும் ஈரானும் ஒன்றையொன்று எச்சரித்து கருத்துக்களை வெளியிட்டுள்ளன.

போர் தொடங்கப்பட்டு ஆறு மாதங்களை நெருங்கும் நிலையிலும், இரு தரப்பினருக்கும் இடையே எந்தவித அமைதிப் பேச்சுகளும் நடைபெறவில்லை.

அதேவேளை, ஹோர்முஸ் நீரிணை வழியிலான எண்ணெய் போக்குவரத்து முற்றாக முடங்கியுள்ளது. அனுமதியற்ற எண்ணெய் தாங்கிப் படகுகள் அந்த குறுகிய நீர்வழியைக் கடக்க முயன்றால் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் அச்சுறுத்தி வருகிறது.

ஈரான் மீது “வரலாற்றிலேயே மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகள்” விதிக்கப்படும் என அமெரிக்க நிதியமைச்சர் ஸ்கொட் பெசென்ட் அறிவிக்கவுள்ளார்.

அத்துடன், இந்த விவகாரத்தில் அமெரிக்காவுடன் ஒத்துழைக்குமாறு சீனாவிடம் வாஷிங்டன் கேட்டுக்கொண்டுள்ளது.

அனலிட்டிக்ஸ் நிறுவனமான கேப்லரின் 2025 ஆம் ஆண்டு தரவுகளின்படி, ஈரானிடமிருந்து ஏற்றுமதி செய்யப்படும் எண்ணெய்யில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவற்றைச் சீனாவே கொள்முதல் செய்கிறது. இந்நிலையில், இந்தப் பிரச்சினையை ராஜதந்திர ரீதியில் தீர்க்க வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்காவின் இந்த புதிய பொருளாதாரத் தடை அறிவிப்பு குறித்து சனிக்கிழமை கருத்துத் தெரிவித்த ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் இஸ்மாயில் பாகே , “இது ஐக்கிய நாடுகள் சபையின் ஒவ்வொரு சுதந்திர உறுப்பு நாட்டின் மீதும் இறையாண்மையை மீறி அமெரிக்கா தன் அதிகாரத்தைச் செலுத்த முயலும் செயலாகும்” எனக் குறிப்பிட்டார்.

மேலும், “இத்தகைய இரண்டாம் நிலைத் தடைகளுக்கு சர்வதேச சட்டத்தில் எவ்வித ஆதாரமும் இல்லை” என்றும் அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles