லண்டனில் உள்ள நகைக் கடை ஒன்றுக்குள் சுரங்கம் தோண்டி நுழைய முற்பட்ட மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவர்கள் மூவரும் நகைகளை கொள்ளையடிக்க முயன்றனர் என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர்.
அதேநேரம் சுரங்கம் தோண்ட பயன்படுத்தும் கருவிகளையும் அவர்களிடம் இருந்து கைப்பற்றியதாக பெருநகர பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பெருநகர பறக்கும் படையின் விசாரணையில், இந்தக் குழு லண்டன் முழுவதும் £700,000 இற்கும் அதிகமான மதிப்புள்ள பொருள்களை திருடினர் எனவும் தெரியவருகிறது.
இதனைத் தொடர்ந்து மூவரும் கிங்ஸ்டன் கிரவுன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அக்டோபர் 23 ஆம் திகதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
