கிராஸ்கன்ட்ரி நிறுவனம் நேற்று முதல் இங்கிலாந்து முழுவதும் பெரும்பாலான ரயில் சேவைகளை இரத்து செய்துள்ளது.
இந்த வேலைநிறுத்தம் மறு அறிவிப்பு வரும்வரை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரக் கோளாறு காரணமாக முக்கிய மேலாண்மை அமைப்புகள் செயலிழந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ரயில் போக்குவரத்துக்கு பதிலாக வரையறுக்கப்பட்ட விமான சேவைகள் மற்றும் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சில்டர்ன் ரயில்வேஸ் மற்றும் எல்.என்.இ.ஆர் உள்ளிட்ட மாற்று நிறுவனங்களால் ஞாயிற்றுக்கிழமை பயணச்சீட்டுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், அவை புதன்கிழமை வரை செல்லுபடியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் தாமதமான பாதிக்கப்பட்ட பயணிகள், தாமதத்திற்கான இழப்பீட்டுத் தொகையைப் (Delay Repay) பெறத் தகுதியுடையவர்கள். அதே சமயம், பயணம் செய்ய வேண்டாம் என முடிவு செய்பவர்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம் எனவும் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
