ஓமன் அருகே அரபிக்கடலில் சென்ற கச்சா எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த கச்சா எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தியது யார்? என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை என்றும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஓமனின் அஷ் ஷிஷான் நகரில் இருந்து 9 நாட்டிகல் மைல் தொலைவில் ஹோர்முஸ் நீரிணை அருகே இன்று அதிகாலை கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு கப்பல் சென்றுள்ளது.
அந்த கப்பலை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் கப்பலின் எஞ்சின் அறை முழுவதும் சேதமடைந்துள்ளது. இதையடுத்து, கப்பலில் இருந்த மாலுமிகள் ஒமன் கடற்படையால் பத்திரமாக மீட்கப்பட்டததாக தகவல் வெளியாகியுள்ளது.
