வடகொரியாவின் உயர்மட்ட இராணுவத் தலைமையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் நோ குவாங்-சோல் பதவியில் இருந்தும் கட்சியின் மத்திய தலைமைப் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக கொரிய மக்கள் இராணுவத்தின் பொது அரசியல் பணியகத்தின் இயக்குநரும், மூத்த இராணுவ அதிகாரியுமான கிம் சோங்-கி, புதிய பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது பியோங்யாங்கின் இராணுவத் தலைமையில் ஏற்பட்ட பெரும் மாற்றமாக கருதப்படுகிறது.
அமெரிக்க-தென்கொரிய இராணுவப் பயிற்சிகள் தொடர்பாக அதிகரித்துள்ள பதட்டங்களுக்கு மத்தியில், இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
