அரசியலில் இருந்து ஒதுங்குகிறார் ஸ்டாமர்! எம்.பி. பதவியிலிருந்தும் விலகல்!!

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் கெயர் ஸ்டாமர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக முடிவு செய்ததைத் தொடர்ந்து, அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

வெஸ்ட்மின்ஸ்டரில் 11 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, ஹவுஸ் ஆஃப் கொமன்ஸை House of Commons விட்டு வெளியேற இதுவே “சரியான நேரம்” என்று அவர் கூறியுள்ளார் என உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஸ்டாமரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து லண்டனில் உள்ள அவரது தொகுதியான ஹோல்போர்ன் Holborn மற்றும் செயின்ட் பான்கிராஸில் St Pancras தற்போது ஒரு சிறப்புத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2015இல் நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு முன்பு, பொது வழக்குகள் இயக்குநராக பொதுத்துறையின் முன்னணி வழக்கறிஞராக இருந்த ஸ்டார்மர், 2019 முதல் 2026 வரை தொழிலாளர் கட்சியை வழிநடத்தினார்.

2024இல் நடந்த பொதுத் தேர்தலில் அவர் பெரும் வெற்றி பெற்றார், ஆனால் மக்களின் நன்மதிப்பைத் தக்கவைத்துக் கொள்ள முடியாமல், கருத்துக் கணிப்பு மதிப்பீடுகள் சரிந்ததைத் தொடர்ந்து ஜூன் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அவருக்குப் பதிலாக ஆண்டி பர்ன்ஹாம் பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles