படகுகள் மூலம் இடம்பெறும் ஆட்கடத்தலை தடுக்க பிரான்ஸ் – பிரித்தானியா இடையே ஒப்பந்தம்

ஆங்கிலக் கால்வாய் ஊடாக இடம்பெறும் புலம்பெயர்தலை தடுக்க பிரித்தானிய அரசாங்கம் பிரான்ஸுடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டுள்ளது.

03 ஆண்டுகள் செயற்படுத்தப்படும் இந்த ஒப்பந்தத்திற்காக 662 மில்லியன் பவுண்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரெஞ்சு கடற்கரைப் பகுதிகளில் சிறிய படகுகள் மூலம் இடம்பெறும் ஆட்கடத்தலை தடுப்பதே இதன் நோக்கம் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்காக 45 அதிகாரிகளை கொண்ட ஒரு சிறிய பிரிவு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம், பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பிரெஞ்சு அதிகாரிகளின் மொத்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 1,050 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேநேரம் ஆட்கடத்தல் வலையமைப்புகளைச் சீர்குலைப்பதற்காக, பிரான்ஸ் தனது சிறப்பு உளவு மற்றும் நீதித்துறை குழுவை 18 அதிகாரிகளிலிருந்து 30 அதிகாரிகளாக விரிவுபடுப்படுத்தியுள்ளது.

பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் பிரதமர் ஆண்டி பர்னம் ஆகியோருக்கு இடையே லண்டனில் நடைபெற்ற சந்திப்பின்போது இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles