ஆக்கிரமிப்பாளரான அமெரிக்கா, ஹோர்முஸ் நீரிணையை விட்டு வெளியேறவேண்டும் என ஈரான் அறிவித்துள்ளது.
ஈரானின் எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டதை தொடர்ந்து மத்தியக்கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஹோர்முஸ் நீரிணைக்குள் நுழைய முயன்ற அமெரிக்க கடற்படை ஆளில்லா விமானத்தை தங்கள் படைகள் குறிவைத்ததாக ஈரான் இன்று அறிவித்தது.
இது தொடர்பில் ஈரான் அரசு தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC), மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்மூஸ் நீர்வழிக்குள் நுழையவிருந்த “ஆளில்லா மேற்பரப்புக் கப்பல்” மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறியுள்ளது.
ஆக்கிரமிப்பாளரான அமெரிக்கா, இப்பகுதியை விட்டு வெளியேறி தனது தீய செயல்களை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்,” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜலசந்தியில் மூன்று எண்ணெய் கப்பல்கள் மற்றும் அமெரிக்காவுடன் தொடர்புடைய மூன்று கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக IRGC கூறியதைத் தொடர்ந்து இது நிகழ்ந்துள்ளது.
மேலும் ஹோர்முஸ் நீரிணை, அங்கீகரிக்கப்படாத பாதைகள் வழியாகச் செல்ல முயற்சிக்கும் கப்பல்களையும் அந்தப் படை எச்சரித்துள்ளது.
