இஸ்ரேலியக் குடியேற்றங்களிலிருந்து வரும் பொருட்கள் மற்றும் சேவைகளின் வர்த்தகத்திற்கு தடை விதிக்க பிரித்தானியா தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான புதிய விதிகளை வெளியுறவுச் செயலாளர் எட் மிலிபான்ட் அறிவிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.
ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் சர்ச்சைக்குரிய E1 குடியேற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாக 1,200 வீடுகளுக்கு டெண்டர்கள் வெளியிட இஸ்ரேல் தீர்மானித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த முடிவு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிடமிருந்து கடுமையான விமர்சனங்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் என்று இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் கிடியான் சார் எச்சரித்துள்ளார்.
