உத்தர பிரதேசத்தில் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பக்தர்கள் உயிரிழப்பு

உத்தர பிரதேச மாநிலம், பாக்பத் மாவட்டத்தில், கிழக்கு புறவழிச்சாலையில் பக்தர்களை ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும், 16 பேர் காயமடைந்தனர்.

ராஜஸ்தான் மாநிலம், ஹனுமன்கர் மாவட்டத்தில் உள்ள பாகத் தாம், ஜஹர்வீர் பாபா கோகா ஜி மகாராஜ், கோகா நாத் ஜி ஆகியோருடன் தொடர்புடைய முக்கியமான புனிதத் தலமாகும். ஓகஸ்ட் மற்றும் செப்ரெபர் மாதங்களில் இங்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றமை வழக்கம்.

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம், பதாயூன் கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் 32 பேர் பாகத் தாமுக்கு சென்று விட்டு, தனியார் வாகனத்தில் சொந்த ஊர் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது, உத்தர பிரதேச மாநிலம், பாக்பத் மாவட்டம், பாசி மற்றும் படா கிராமங்களுக்கு இடையே நேற்று அதிகாலை 1 மணியளவில் வந்த கொண்டிருந்த அந்த வாகனம், சாலையின் தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது. இச்சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த 16இற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles