ஜெருசலேமில் உள்ள பிரித்தானிய தூதரகத்தை மூட இஸ்ரேல் உத்தரவு – 30 நாட்கள் கெடு!

கிழக்கு ஜெருசலேமில் உள்ள பிரித்தானியாவின் துணைத் தூதரகத்தை 30 நாட்களுக்குள் மூடுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காசா தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ள அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட பிரித்தானிய அதிகாரிகள் மற்றும் ரமல்லாவில் பணியாற்றும் பிரித்தானிய ஊழியர்கள் 7 நாட்களுக்குள் அங்கிருந்து வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய குடியேற்றங்களுக்கு எதிராக பிரித்தானியா அண்மையில் விதித்த தடைகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இஸ்ரேல் மற்றும் பிரித்தானியா இடையிலான உறவுகளில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்த உத்தரவு வெளியாகியுள்ளமை மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles