ரஷ்ய ஆலைகள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு அமெரிக்கா அழைப்பு

ரஷ்யாவின் டீசல் உற்பத்தி ஆலைகள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு உக்ரைனுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளதை கிரெம்ளின் வரவேற்றுள்ளார்.

ரஷ்யாவின் டீசல் உள்கட்டமைப்புகளைத் தாக்குவதை நிறுத்துமாறு உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு ட்ரம்ப் நேற்று அழைப்பு விடுத்தார்.

இந்தத் தாக்குதல்கள் எரிபொருள் பற்றாக்குறையை ஏற்படுத்துவதாகவும், அது “உலகைப் பாதிக்கிறது” என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில் ட்ரம்பின் கூற்றை வரவேற்றுள்ள கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், “பொதுமக்களின் பொருளாதார உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு கீவ் ஆட்சிக்கு விடுக்கப்படும் எந்தவொரு அழைப்பும் வரவேற்கப்பட வேண்டியதே,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சமீபத்திய மாதங்களில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது உக்ரைன் நடத்திய நீண்ட தூர ஆளில்லா விமானத் தாக்குதல்கள், ரஷ்யாவின் எரிபொருள் உற்பத்தியைக் குறைத்து, நாடு முழுவதும் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் பற்றாக்குறையைத் தூண்டியுள்ளது.

ரஷ்ய சுத்திகரிப்பு ஆலைகள் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம், மொஸ்கோவிற்கு நிதிச் சுமையை அதிகரிக்க முயல்வதாக உக்ரைன் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது,

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles