சிங்கப்பூர் மீது அமெரிக்கா வரி விதிக்கக்கூடாது – பிரதமர் வோங்

சிங்கப்பூர்மீது அமெரிக்கா வர்த்தக வரி எதையும் விதிக்கக்கூடாது என்று பிரதமர் லோரன்ஸ் வோங் (Lawrence Wong) கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் நடைபெறும் Forbes Global CEO மாநாட்டில் சிங்கப்பூர் மீது 12.5 வீதம் வரியை அமெரிக்கா விதித்திருப்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த போது பிரதமர் அவ்வாறு சொன்னார்.

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு சிங்கப்பூர் எந்தவித வரிகளையும் விதிப்பதில்லை என்றும் அமெரிக்காவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தைக் கொண்டுள்ளது என்றும் வோங் கூறினார். சிங்கப்பூரின் வளர்ச்சிக்குத் தடையற்ற வர்த்தகம் முக்கியமானது என்றார் அவர்.

உலகம் மேலும் பிளவுபட்டு வரும் நிலையில், சிங்கப்பூர் தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ள முடியாது என்றும் அவர் சொன்னார்.

பிற நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்துவது, பன்முனைப்படுத்துவது ஆகியவற்றில் சிங்கப்பூர் கவனம் செலுத்துவதாக அவர் தெரிவித்தார்.

ஆசியான் நாடுகளுடன் பொருளாதார ஒத்துழைப்பையும் ஒருங்கிணைப்பையும் ஆழப்படுத்துவது அதில் அடங்கும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles