தாதா சாகேப் பால்கே விருது பெறுகிறார் கன்னட நடிகர் அனந்த் நாக்!

கன்னட திரையுலகின் மகத்தான நடிகராகத் திகழும் அனந்த் நாக், 2024-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதைப் பெறுகிறார். இந்திய சினிமாவுக்கு அளித்த பங்களிப்புக்காக, திரையுலகின் மிக உயரிய கவுரத்தை அளிக்கிறது மத்திய அரசு.

இது குறித்து இன்று (செப்.16) மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்திய சினிமாவுக்கு அனந்த் நாக் அளித்த பங்களிப்பு மற்றும் பல தலைமுறைகளை ஊக்குவிக்கும் வகையிலான அவரது திரைப் பயணத்தைக் கருத்தில் கொண்டு தாதா சாகேப் பால்கே விருது தேர்வுக்குழுவின் பரிந்துரையின்படி, அனந்த் நாக்-க்குக்கு பெருமைக்குரிய தாதா சாகேப் பால்கே விருது 2024 வழக்குவதில் இந்திய அரசு மகிழ்ச்சி கொள்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருது வரும் 22ஆம் திகதி குஜராத்தின் கேவாடியாவில் வைத்து நடைபெற இருக்கும்
72ஆவது தேசிய திரைப்பட விழாவில் அவருக்கு வழங்கப்பட உள்ளது.

அனந்த் நாகர்கட்டே என்ற அனந்த் நாக் 1948ஆம் ஆண்டு செப்ரெம்பர் 4ஆம் திகதி பிறந்தார். கன்னட திரையுலகில் மிகவும் மதிப்புக்குரிய மூத்த நடிகரான அனந்த் நாக், 250இற்கும் அதிகமான கன்னடப் படங்கள் உள்ளிட்ட 300இற்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். கன்னடம் தவிர இந்தி, தெலுங்கு, தமிழ், மராத்தி, மலையாளம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

திரைப்படங்கள் தவிர தொலைக்காட்சி தொடர்களிலும் தனது நடிப்பால் அனந்த் நாக் முத்திரை பதித்துள்ளார். புகழ்பெற்ற எழுத்தாளரான ஆர்.கே.நாராயண் கதைகளை அடிப்படையாகக் கொண்டு தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மால்குடி டேஸ்’ தொடரிலும் இவர் நடித்துள்ளார்.

தனது திரை வாழ்க்கையில் 5 முறை கர்நாடக மாநில அரசு விருது பெற்றுள்ள அனந்த் நாக்-குக்கு மத்திய அரசு 2025ஆம் ஆண்டு ‘பத்ம பூஷன்’ விருது வழங்கி கவுரவித்தது.

தமிழ் ரசிகர்களைப் பொறுத்தவரையில், ‘கேஜிஎஃப்’ படம் மூலம் இவர் வெகுவாக அறியப்பட்டமை கவனிக்கத்தக்கது.

இதனிடையே, பிரதமர் மோடி, தாதாசாகேப் பால்கே விருது பெற இருக்கும் அனந்த் நாக்-குக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles