சிங்கப்பூரில் மகள், பேர்த்திகள் இருவர், சகோதரரின் மகள்கள் நால்வர் உட்பட 11 பெண்களுக்கு 30 ஆண்டு காலத்தில் பாலியல் வன்கொடுமை இழைத்த 71 வயது முதியவருக்கு இன்று வியாழக்கிழமை 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண்களில் மற்றறைய நால்வர், 1997இலிருந்து 2021ஆம் ஆண்டு வரை குற்றவாளியும் அவரின் மனைவியும் வேலை செய்த இணைப்பாட நிலையத்தில் மாணவர்களாக இருந்தவர்கள். அந்தப் 11 பெண்களுக்கு 1990இலிருந்து 2023ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பாலியல் வன்கொடுமை இழைக்கப்பட்டது. அவர்களில் சிலருக்கு ஐந்து அல்லது ஆறு வயது மட்டுமே ஆகியிருந்தது.
குற்றங்கள் நிகழ்ந்த காலகட்டத்தில் குற்றவாளி இருமுறை சிறைக்குச் சென்றார். பாலியல் குற்றங்களுக்காக அவர் 1999ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதமும் 2020 மார்ச் மாதமும் சிறைக்கு அனுப்பப்பட்டார். சம்பந்தப்பட்ட 11 பெண்களை தவிர்த்து மற்றையவர்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல், மானபங்க குற்றங்களுக்காக அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த 11 பெண்கள் சம்பந்தப்பட்ட பாலியல் குற்றங்கள் கடந்த 2023ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம்தான் வெளிச்சத்துக்கு வந்தன. தாத்தா, தங்களுக்குப் பாலியல் வன்கொடுமை இழைத்ததார் என பேர்த்திகள் தாயிடம் தெரியப்படுத்திய பிறகு குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.
குற்றவாளியான முதியர் தற்போது சக்கர நாற்காலியில் நடமாடுகிறார். அவருக்கு அரியவகை ரத்தப் புற்றுநோய் இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
