சுற்றுலா கட்டணத்தை உயர்த்துவது தொடர்பில் வெனிஸ் அரசு பரிசீலனை

வெனிஸ் அரசாங்கம் சுற்றுலா நுழைவுக் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பில் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய தினசரி கட்டணத்தை €30 (S$44) வரை உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருவதாக அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய €5 முதல் €10 வரையிலான கட்டணம், அளவுக்கு மீறிய சுற்றுலாப் பயணிகளைத் தடுப்பதற்கு மிகவும் குறைவாக உள்ளது என்று வரவு செலவு மற்றும் வரிவிதிப்பு கவுன்சிலர் மிஷேல் ஸுயின் Michele Zuin சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் நுழைவுக் கட்டணத்தை 50 யூரோவாக உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் இருப்பினும் அதிகாரிகள் அதிகபட்சமாக 30 யூரோக்கள் என்ற கட்டணத்தை நிர்ணயிக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.

உலக நாடுகளிலேயே முதல் முறையாக வெனிஸில்தான் சுற்றுலா நுழைவுக் கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles