யாழில் சுமார் 38 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணத்தில் 192 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் படகொன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மண்டைதீவு கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் படகொன்று காணப்படுவதாக கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த கடற்படையினர், குறித்த படகை கைப்பற்றியுள்ளனர்.

குறித்த படகினுள், பெருந்தொகையான கஞ்சா காணப்பட்டதை அடுத்து, படகை கரைக்கு கொண்டு வந்து, படகில் இருந்த பெருந்தொகையான கஞ்சாவை மீட்டுள்ளனர்.

இதன்போது அதில் 192 கிலோகிராம் கேரள கஞ்சா காணப்பட்டுள்ளதுடன் அதன் பெறுமதி 38 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

அதனை அடுத்து மீட்கப்பட்ட கஞ்சா மற்றும் படகை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கடற்படையினர் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அதனை தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நாச்சிக்குடா பகுதியை சேர்ந்த 36 வயதுடைய நபரை கைது செய்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles