இங்கிலாந்தில் வட்டி வீதங்கள் உயர்வதற்கு வாய்ப்பு

இங்கிலாந்தில் வட்டி வீதங்களை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வங்கியின் துணை ஆளுநர் கிளேர் லோம்பார்டெல்லி தெரிவித்துள்ளார்.

எரிசக்தி விலைகள் அதிகரித்தால் இந்த நிலை ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

வார்சாவில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், நீடித்த எரிசக்தி விலை அழுத்தங்கள் பணவீக்க எதிர்பார்ப்புகளையும் ஒட்டுமொத்த நுகர்வோர் விலைகளையும் உயர்த்தும் அபாயத்தைக் கொண்டுள்ளன எனக் கூறினார்.

இதேவேளை இங்கிலாந்தின் பணவீக்கம் கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு 3.1 சதவீதத்தை எட்டியுள்ளது.

மேலும் இந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் பணவீக்கம் சுமார் 3.7 சதவீதமாகவும், 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 4.2 சதவீதமாகவும் உயரும் என்று மத்திய வங்கி கணித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles