781 புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் பிரவேசித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு புலம்பெயர்ந்தோர் படகுகள் எல்லைப் பாதுகாப்புப் படையினரைத் தவிர்த்து, இரண்டு நாட்களுக்குள் கென்ட் கடற்கரையை அடைந்ததாக உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத் தெரிவித்துள்ளார்.
ஃபோக்ஸ்டோன் மற்றும் டோவர் கடற்கரைகளில் படகுகள் தரையிறங்கியதைத் தொடர்ந்து, அவற்றை இடைமறிக்கத் தவறியது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் விவரித்தார்.
இதற்கிடையே புள்ளிவிபரங்களின்படி, இந்த ஆண்டிற்கான சிறிய படகுகளின் மொத்த வருகை 18,565-ஐ எட்டியுள்ளது.
இது 2025-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 42 சதவிகிதம் குறைவாகும்.
