நல்லூரில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல்!

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் இறுதிநாள் நிகழ்வுகள் இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தியாகி திலீபன் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த நேரமான காலை 10.48 மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாகி நடைபெற்றது.

அதன் போது ஈகை சுடரினை மாவீரர்களான அன்புக்குமாரன் மற்றும் தம்பமணி ஆகிய இரு மாவீரர்களின் பெற்றோர்களான அருணாச்சலம் வல்லிபுரம் மற்றும் வல்லிபுரம் செல்வராணி ஆகியோர் ஏற்றி வைத்தனர்.

அதேவேளை தியாக தீபம் உண்ணாநோன்பிருந்த நல்லூர் ஆலய வீதியில் ஈகைச் சுடரினை மாவீரர்களான செல்லக்கண் மற்றும் இசை செல்வன் ஆகிய இரு மாவீரர்களின் சகோதரி , போராளி சுப்பிரமணியம் மலர்விழி ஏற்றி வைத்தார்

அதனை தொடர்ந்து தியாக தீபத்தின் நினைவாலயத்தில் உள்ள தியாக தீபத்தின் திருவுருவ சிலைக்கு மாவீரர் அறிவிழியின் தந்தையான மூத்த போராளி முத்துக்குமார் மனோகர் மலர் மாலை அணிவித்ததை தொடர்ந்து, திருவுருவ சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதேவேளை இறுதிநாள் நிகழ்வான இன்றைய தினம் சனிக்கிழமை இளைஞன் ஒருவர் தூக்கு காவடி எடுத்து தியாக தீபத்தின் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினார்

அத்துடன் யாழ்ப்பாணத்தின் ஏனைய பாகங்களில் இருந்தும் , கிளிநொச்சியில் இருந்தும் தியாக தீபத்தின் திருவுருவ படங்கள் தாங்கிய ஊர்திகள் நினைவாலயத்தை வந்தடைந்திருந்தன.

Crowd at a Tamil festival or gathering under a bright yellow banner with red Tamil text, colorful pennants, and a statue in the center.

People participate in a Hindu fire ceremony, pouring flame from a brazier while others hold ceremonial items amid bright festival banners and flowers.

Dense crowd at an outdoor cultural festival with a decorated ceremonial statue at the center and colorful red/yellow banners overhead.

Religious procession with a decorated palanquin carried by men amid a crowd; shirtless man wearing yellow headband beneath a colorful canopy and garlands.

Colorful parade on a sunny street with decorated floats, banners, and people watching; large billboards and palm trees in the background.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles