யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியின் வல்லை வெளிப் பகுதியில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் பூசாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஆலய வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர் வீதியில் ஏறிய இளைஞர் ஒருவரின் மோட்டார் சைக்கிள், வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பூசகரின் மோட்டார் சைக்கிளுடன் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது பூசகர் வீதியில் வீழ்ந்த நிலையில், பின்னால் வந்த சிறிய ரக பட்டா வாகனம் அவர் மீது மோதியுள்ளது.
இதனால் வாகனத்தின் சில்லில் சிக்குண்ட பூசாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த பூசகரின் சடலம் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், விபத்து தொடர்பில் நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
