அமெரிக்காவை தாக்கிய ‘நோர்ஈஸ்டர்’ புயலால் 142 ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய கப்பல் வெளிப்பட்டது

Waves crash over a weathered log jetty, sea spray exploding in all directions over dark, wet wood on a gray seascape.

அமெரிக்காவின் கிழக்குக் கடலோரப் பகுதிகளை தாக்கிய வீரியமிக்க ‘நோர்ஈஸ்டர்’ (Nor’easter) புயலின் காரணமாக , மசாசூசெட்ஸ் மாநிலத்தின் நன்டுக்கெட் (Nantucket) தீவுக் கரையில்
1884ஆம் ஆண்டு மூழ்கிய பழமையான மரக்கப்பலின் பெரும்பாகங்கள் வெளியே தெரியவந்துள்ளது.

மசாசூசெட்ஸ் மாநிலத்தின் தெற்குப் பகுதியில் அமைந்த மியாகோமட் (Miacomet) கடற்கரையில் வீசிய பலத்த காற்று மற்றும் பிரம்மாண்ட அலைகள் மணல் மேடுகளை அடித்துச் சென்றன.

இதனால் மணலுக்கு அடியில் நூற்றாண்டுக்கும் மேலாகப் புதைந்து கிடந்த ‘வாரன் சாயர்’ (Warren Sawyer) என்ற 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரபல ‘ஸ்கூனர்’ (Schooner) ரக மரக்கப்பலின் பிரம்மாண்ட விட்டங்கள் மற்றும் உலோக பாகங்கள் வெளிப்பட்டன.

கடந்த 1884ஆம் ஆண்டு டிசெம்பர் 22 அன்று நியூ ஆர்லியன்ஸ் நகரிலிருந்து பொஸ்டனை நோக்கிப் பருத்தி மற்றும் இரும்புப் பொருட்களுடன் பயணித்த போது, வீசிய பயங்கரப் புயலில் சிக்கி இக்கப்பல் நடுக்கடலில் தரைதட்டி விபத்துக்குள்ளானது.

கப்பலில் இருந்த மாலுமிகள் அனைவரும் கடற்கரை மீட்புக் குழுவினரால் பத்திரமாக மீட்கப்பட்ட போதிலும், கப்பல் கடலுக்குள் மூழ்கி மணலுக்குள் புதைந்தது.

சுமார் 142 ஆண்டுகளுக்கு முந்தைய இந்த வரலாற்று சிறப்புமிக்க கப்பலைக் காண ஏராளமான தொல்பொருள் ஆர்வலர்களும் பொதுமக்களும் கடற்கரையில் திரண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles