சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை மீண்டும் உயர்வு!

மத்திய கிழக்கில் பதற்றம் நீடிக்கும் சூழலில், இன்று திங்கட்கிழமை சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் ஒரு சதவீதத்துக்கும் அதிகமாக மீண்டு உயர்ந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.

ஈரான் முன்வைத்த அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்ததைத் தொடர்ந்து இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது.

GMT நேரம் 00:36 மணி நிலவரப்படி, பிரெண்ட் மசகு எண்ணெய் எதிர்கால ஒப்பந்த விலை 1.32 டொர் அல்லது 1.27% உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 105.64 டொலர்களாக இருந்தது.

அதேவேளையில், அமெரிக்காவின் ‘வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட்’ (WTI) மசகு எண்ணெய் விலை 70 சென்ட் அல்லது 0.76% உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 93.11 டொலராக இருந்தது.

நியூயோர்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில், கட்டார் நாட்டு மத்தியஸ்தர்கள் வாயிலாக அமெரிக்கர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, ஈரான் கடந்த வாரம் ஒரு அமைதித் திட்டத்தை அறிவித்தது.

இத்திட்டத்தை நிராகரிப்பதாக சனிக்கிழமையன்று ட்ரம்ப் கூறினார்; இருப்பினும், ஞாயிற்றுக்கிழமையன்று ‘ஆக்சியோஸ்’ (Axios) ஊடகத்திற்கு அளித்த தொலைபேசி நேர்காணலில், இந்த வாரம் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

அதேநேரம், ஹவுதிகளும் ஈரானும் சவுதி அரேபியா மீதான தாக்குதல்களைத் தொடர்வதால், பிராந்திய விநியோகப் போக்குவரத்து பாதிக்கப்படக்கூடிய நிலையில், புவிசார் அரசியல் அபாயங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

ஈரான் ஆதரவு ஹவுதிகளால் சவுதி அரேபியாவை நோக்கி ஏவப்பட்ட இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் இரண்டு ட்ரோன்களையும் இடைமறித்ததாக, சவுதி தலைமையிலான யேமன் கூட்டணி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles