ஈராக்கில் இருந்து முழுமையாக வெளியேறும் அமெரிக்க படைகள்

20 ஆண்டுகளுக்கு பின் ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகள் முழுதும் வெளியேறுவது அண்டை நாடான ஈரானுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், ஈராக்கின் உள்நாட்டு பாதுகாப்பு கேள்விக்குறியாகும் சூழல் உருவாகியுள்ளது.

அணு ஆயுதங்கள் மற்றும் இரசாயன ஆயுதங்கள் போன்ற பேரழிவு ஆயுதங்களை ரகசியமாக தயாரிப்பதாகக் கூறி, மேற்காசிய நாடான ஈராக் மீது, 2003,ல் அமெரிக்கா போர் தொடுத்தது.

கைது செய்யப்பட்ட ஈராக் அதிபராக இருந்த சதாம் உசைன், 2006ல் துாக்கிலிடப்பட்டார்.

ஈராக்குடனான போருக்கு பின் அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் பிற காரணங்களுக்காக அமெரிக்க படைகள் அங்கேயே தங்கி இருந்தன. இந்நிலையில், அமெரிக்காவில் கடந்த முறை ஜனாதிபதியாக இருந்த ஜோ பைடன் தலைமையிலான அரசின் காலத்தில், ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் படிப்படியாக வெளியேறும் என அறிவிக்கப்பட்டது.

அப்போது நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த வெளியேற்றம் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்கப் படைகள் முழுதும் இன்று வெளியேற முடிவு செய்யப்பட்டுள்ளது.​

இது மேற்காசிய நாடுகளின் அரசியலில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. அமெரிக்கப் படைகளின் வெளியேற்றத்தை ஈரானும் அதன் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களும் மிகப் பெரிய வெற்றியாக கொண்டாடுகின்றன.

முக்கிய தளமான அல் அசாத் விமானப்படை தளம் உள்ளிட்டவற்றில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதால், ஈராக் மீதான தன் அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு செல்வாக்கை ஈரான் மேலும் விரிவுபடுத்தக்கூடும் என கூறப்படுகிறது.

மேலும், ஈராக்கின் பாதுகாப்பில் ஒரு வெற்றிடம் உருவாகலாம் என சர்வதேச ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதைப் பயன்படுத்தி ஐ.எஸ்., போன்ற தீவிரவாத அமைப்புகள் மீண்டும் தலையெடுக்க வாய்ப்புள்ளதாகவும், வடக்கில் உள்ள குர்ஷித் தன்னாட்சி பகுதிக்கு வெளிப்படையான அச்சுறுத்தல்கள் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

அமெரிக்கப்படைகள் வெளியேறுவதால், ஈராக் அரசு சொந்த நாட்டை காப்பாற்றிக் கொள்ள பல்வேறு தலையீடுகளை சமாளிக்க வேண்டிய கடினமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles