இலங்கைக்கு அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் முடங்கியுள்ள ஈரானிய எண்ணெய் தாங்கி கப்பல்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்கினால் இலங்கை மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படலாம் என கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக ‘வோல்ஸ்ட்ரீட் ஜேர்னல்’ செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் கடல்சார் முற்றுகை மற்றும் பொருளாதாரத் தடைகள் காரணமாக, இலங்கையின் தென்மேற்கு கடற்கரையிலிருந்து சுமார் 15 கடல் மைல் தொலைவில் ஈரானியக் கொடியுடன் கூடிய 20 வெற்று எண்ணெய் தாங்கி கப்பல்கள் தற்போது நங்கூரமிட்டுள்ளன. சீனாவுக்குக் மசகு எண்ணெயை விநியோகித்துவிட்டுத் திரும்பிய இக்கப்பல்கள், மலேசிய மற்றும் இலங்கை எல்லைகளில் சிக்கியுள்ளன.

இலங்கை அரசுக்கு அமெரிக்க அதிகாரிகள் கடந்த சில வாரங்களாக இது தொடர்பாக அழுத்தம் கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, இக்கப்பல்களுக்குச் சேவை அளிக்கும் உள்ளூர் நிறுவனங்கள் மீது ‘இரண்டாம் நிலைத் தடைகள்’ விதிக்கப்படக்கூடும் என்று அமெரிக்கத் தூதரகம் கடந்த ஒகஸ்ட் மாதமே எச்சரித்திருந்தது.

இதன் விளைவாக, கொழும்பு துறைமுக எல்லையை வந்தடைந்த ஈரானிய கொள்கலன் கப்பல்களுக்குச் சேவைகளை வழங்குவது பாதுகாப்பானதல்ல என இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது. மேலும், இஇலங்கை கடற்பரப்புக்கு அருகில் நங்கூரமிட்டுள்ள ஈரானிய எண்ணெய் தாங்கி கப்பல்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்கினால் தடைகள் எதிர்கொள்ள நேரிடும் என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரித்துள்ளதாக ‘வோல்ஸ்ட்ரீட் ஜேர்னல்’ செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் தென்மேற்கு கடற்கரையிலிருந்து சுமார் 15 கடல் மைல் தொலைவில், உணவு மற்றும் குடிநீர் பற்றாக்குறையுடன் 20 வெற்று ஈரானிய எண்ணெய் தாங்கி கப்பல்கள் சிக்கியுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles