‘ஜெயிலர் 2’ ட்ரெய்லர் வெளியானது

ரஜினியின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

நெல்சன் திலீப்குமர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் ‘ஜெயிலர் 2’ படம் ஒக்ரோபர் 15 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

திலீப் (சுராஜ் வெஞ்சரமூடு) தனது அடியாளிடம் முத்துவேல் பாண்டியனைப் (ரஜினி) பற்றி விசாரிப்பதில் தொடங்குகிறது இந்த ட்ரெய்லர். மகனின் மறைவுக்கு பிறகு தன் அடையாளத்தை மறைத்துக் கொண்டு ஓட்டுநராக வாழும் முத்துவேல் பாண்டியன், கல்பக்ஸ் என்கிற கடத்தல் கும்பலை தேடிக் கண்டுபிடித்து, தன் பாணியில் வேட்டையாடுவதைக் காட்டுகிறது இந்த 2.24 நிமிட ட்ரெய்லர்.

ஏற்கெனவே ‘போதி’யாக எஸ்.ஜே. சூர்யா, ‘திலீப்’ ஆக சுராஜ் வெஞ்சரமூடு, ‘காந்தா’வாக வித்யா பாலன் தோற்றம் வெளியாகி எதிர்பார்ப்பை கிளப்பியிருந்தன. இவர்களுடன், ட்ரெய்லரில் தோன்றும் சிவராஜ்குமார், மோகன்லால் சிறப்புத் தோற்றங்கள் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்கச் செய்கின்றன.

படத்தில் இவர்களுடன் மிதுன் சக்ரவர்த்தி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கடந்த 2023ஆம் வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் தொடர்ச்சியாக வரும் இந்த இரண்டாம் பாகத்துக்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, ஆர்.நிர்மல் படத்தொகுப்புப் பணிகளைக் கவனித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். படம் ஒக்ரோபர் 15 அன்று திரைக்கு வர இருக்கிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles