2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த கட்டார், இந்தியா உட்பட 7 நாடுகள் போட்டி

2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான கட்டாரின் விண்ணப்பத்தை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) உறுதி செய்துள்ளது.

இந்தப் போட்டிக்கான பந்தயத்தில் இந்தியா உட்பட மொத்தம் 7 நாடுகள் உள்ளதாகச் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்கா, ஜெர்மனி, ஹங்கேரி, துருக்கி மற்றும் தென்கொரியா ஆகிய பிற நாடுகள் இந்த அதிகாரப்பூர்வப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

பிற நாடுகள் இப்போட்டியை நடத்தத் தங்கள் விருப்பத்தை தெரிவிக்க வரும் அக்டோபர் 31-ஆம் திகதிவரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

கத்தார் ஏற்கனவே 2022 உலகக்கோப்பை கால்பந்து மற்றும் 2006 ஆசிய விளையாட்டுப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளதுடன், 2030 ஆசிய விளையாட்டுப் போட்டிகளையும் நடத்தவுள்ளது.

2027 மார்ச் மாதத்தில், IOC செயற்குழு விருப்பம் தெரிவித்துள்ள நாடுகளிலிருந்து முதற்கட்டப் பட்டியலை (shortlist) தயாரித்து, அந்த நாடுகளுடன் கலந்துரையாடலைத் தொடங்கும்.

நிதி மேலாண்மை, அரசியல் சூழல் மற்றும் பொதுமக்களின் ஆதரவு ஆகிய காரணிகளின் அடிப்படையில் 2036ஆம் ஆண்டுக்கான நடத்தும் நாடு தேர்வு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“போட்டிகள் எங்கு நடந்தாலும், விளையாட்டு வீரர்களே எங்களது அனைத்துச் செயல்பாடுகளின் மையமாக இருக்க வேண்டும். எனவே, எதிர்காலத்தில் போட்டிகளை நடத்தும் ஒவ்வொரு நாடும் வீரர்களுக்குச் சிறந்த அனுபவத்தை வழங்குவதையே தொடக்கப் புள்ளியாகக் கொள்ள வேண்டும்” என்று IOC தலைவர் கிர்ஸ்டி கோவென்ட்ரி (Kirsty Coventry) தெரிவித்துள்ளார்.

இந்தியா முதன்முறையாக ஒலிம்பிக் போட்டியை நடத்தத் தீவிர விருப்பம் தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் அகமதாபாத் நகர மையத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகிறது.
அகமதாபாத் 2030ஆம் ஆண்டு கொமன்வெல்த் போட்டிகளை நடத்தவுள்ளது குறிப்பிடத்தகுந்தது.

தென்னாபிரிக்கா 2010 உலகக்கோப்பை கால்பந்து மற்றும் 1995 ரக்பி உலகக்கோப்பையை நடத்தியுள்ள போதிலும், இதுவரை ஒலிம்பிக் போட்டியை நடத்தியதில்லை.

வளைகுடா நாட்டில் ஒலிம்பிக் நடத்தப்பட்டால், கோடைக்கால வெப்பம் காரணமாகப் போட்டிகள் வழக்கமான ஜூலை – ஓகஸ்ட் மாதங்களுக்குப் பதிலாகப் பின்னருக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளது.

ஜெர்மனியின் முனிச் நகரம் 1936 நாஜி ஆட்சிக்கால பெர்லின் ஒலிம்பிக்கிற்குப் பிறகு ஒரு நூற்றாண்டுக்குப் பின் இப்போட்டியை நடத்தத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. துருக்கி 2020 ஒலிம்பிக் போட்டிக்கான தேர்வில் டோக்கியோவிடம் இரண்டாம் இடம் பிடித்த நிலையில், இம்முறை வெற்றியை எதிர்பார்க்கிறது.

2028 கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் லொஸ் ஏஞ்சலஸிலும், 2032 போட்டிகள் பிரிஸ்பேனிலும் நடைபெறவுள்ளன. 2036 இற்கான முன்னுரிமை பெற்ற நாடுகள் 2028-இல் அறிவிக்கப்பட்டு, இறுதி முடிவு 2029-ஆம் ஆண்டின் மத்தியில் எடுக்கப்படும் என IOC தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles