உலக பெரும்பணக்காரரும் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, ஸ்டார்லிங்க், எக்ஸ் உள்ளிட்டவற்றின் சொந்தக்காரருமான எலான் மஸ்க்குக்கு ‘நஷனல் மெடல் ஒவ் சயன்ஸ்’ பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள ‘US Institute of Peace’ கல்வி நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற “A New Golden Age submmit” நிகழ்வில் இந்த பதக்கங்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வழங்கிவைத்தார்.
இதன்போது எலான் மஸ்க்கை, ‘நவீனகால தோமஸ் எடிசன்’ என்றும் ‘டைட்டன்’ என்றும் ‘ஜீனியஸ்’ என்றும் ‘தேசிய பொக்கிஷம்’ என்றும் அவரை போல வேறு யாரும் இல்லை என்றும் ட்ரம்ப் பாராட்டினார்.
விண்வெளி தொழில்நுட்பம், சற்றர்லைட் தொலைத்தொடர்பு மற்றும் பிற துறைகளில் மஸ்க்கின் பங்களிப்பை அவர் புகழந்து பேசியுள்ளார்.
