பிரான்ஸில் மாணவர் போராட்டத்தை அடுத்து புதிய ஆசிரியர்களை நியமிக்க இணக்கம்

பிரான்ஸில் தீவிரமடைந்துள்ள மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து பாடசாலைகளுக்கு தேவையான வளங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய மிகவும் மோசமான நிலையில் உள்ள உயர்நிலைப் பாடசாலைகளுக்கு 3,000 மாற்று ஆசிரியர்களை நியமிப்பதாக பிரான்ஸ் கல்வி அமைச்சர் நேற்று உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பில் தொலைகாட்சியில் பேசிய கல்வி அமைச்சர் எட்வர்ட் ஜெஃப்ரே (Edouard Geffray), சுமார் 3,700 உயர்நிலைப் பாடசாலைகளில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள 114 பாடசாலைகளில், பணிக்கு வராத ஆசிரியர்களுக்குப் பதிலாக புதிய ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

இதற்கிடையே நாடு முழுவதும் நடைபெற்ற மாணவர்களின் போராட்டங்களில் 71,500 பேர் பங்கேற்றதாகவும் அவர்களில் காவல்துறையினர் 500-க்கும் மேற்பட்டோரைத் தடுத்து வைத்ததாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள உயர்நிலைப் பாடசாலை மாணவர்கள் (பெரும்பாலும் 15 முதல் 18 வயதுடையவர்கள்), ஆசிரியர்கள் பணிக்கு வராமை, அதிகப்படியான பாடவேளைகள், பழுதடைந்த வகுப்பறைகள் மற்றும் அதிகரித்து வரும் வெப்பத்தைத் தாங்க முடியாத கட்டிடங்கள் ஆகியவை குறித்து முறைப்பாடு அளித்து தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles