மலேசியாவில் ரெலிகிராம் செயலி மூலம் அறிமுகமான 15 வயது பள்ளி மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது.
கடந்த ஒக்டோபர் 4ஆம் திகதி, பிற்பகல் 4 மணியளவில், பண்டார் ஸ்ரீ இண்டா (Bandar Sri Indah), பத்து 10, அப்பாஸ் (Jalan Apas) சாலை பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. உள்ளூர் அதிகார அமைப்பில் ஒப்பந்தத் தொழிலாளராகப் பணிபுரியும் அந்த இளைஞர், சிறுமியைப் காரில் அழைத்துச் சென்று, ஒரு பல்பொருள் அங்காடியின் பின்புறத்தில் பாலியல் வன்கொடுமை செய்ததார் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நிகழ்ந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு சிறுமி தனது தாயிடம் இதுகுறித்துத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, குற்றவாளி நேற்று இரவு கைது செய்யப்பட்டான்.
சந்தேக நபரை ஒக்டோபர் 16ஆம் திகதி வரை ஏழு நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், விசாரணைக்காக அவரது கைப்பேசியும் சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
