டெல்லி போராட்டம்: உச்ச நீதிமன்றில் இன்று சிறப்பு விசாரணை

டெல்லியில் நேற்று (10) போராட்டம் நடைபெற்றதைத் தொடர்ந்து, 2,000 இற்கும் மேற்பட்டோர் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இது தொடர்பான மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை இன்று சிறப்பு விசாரணையை மேற்கொள்ளவுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற சி.ஜே.பி. (CJP) போராட்டங்களின் போது மேற்கொள்ளப்பட்ட காவல்துறையின் நடவடிக்கை மற்றும் பொதுப் போக்குவரத்து மீதான கட்டுப்பாடுகள் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு மனுக்கள் மீது இந்தச் சிறப்பு விசாரணை நடைபெறவுள்ளது.

நீதிமன்ற உத்தரவுகளை மீறியதற்காக அரசாங்கத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி ஒரு மனுவும், எதிர்க்கட்சித் தலைவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து மற்றொரு ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா ஷி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்குகளை விசாரிக்கவுள்ளது.

போராட்டங்கள் காரணமாகப் பொதுப் போக்குவரத்து முழுமையாக முடக்கப்படக்கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி, அதிகாரிகள் டெல்லி மெட்ரோ நிலையங்களைத் தொடர்ந்து மூடியுள்ளதாகவும், ரயில் சேைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும் முதல் மனு குற்றம்சாட்டுகிறது.

இரண்டாவது மனு எதிர்க்கட்சித் தலைவர்களின் தடுப்புக் காவலை எதிர்த்து அவர்களை விடுதலை செய்யக் கோருகிறது.

இந்த நீதிமன்ற அவமதிப்பு மனுவை வழக்கறிஞர் ஷைலேந்திர மணி திரிபாதி தாக்கல் செய்துள்ளார். இதில் மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன், டெல்லி காவல் துறை ஆணையர் அனுராக் குமார் மற்றும் டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (DMRC) தலைவர் டி. தாரா ஆகியோர் எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles