சவூதி விமான நிலையங்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு ஹவுதிகள் எச்சரிக்கை

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மற்றும் சவூதி அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீதான தாக்குததலை ஹவுதி அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர். அத்துடன் புதிய எச்சரிக்கை ஒன்றையும் அவர்கள் விடுத்துள்ளனர்.

இத்தாக்குதலைத் தொடர்ந்து, சர்வதேச விமான நிறுவனங்கள், பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் சவூதி விமான நிலையங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு ஹவுதி அமைப்பு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஹவுதி ராணுவப் செய்தித் தொடர்பாளர் யஹ்யா சாரீ எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில்,

மக்கா மற்றும் மதினா புனித நகரங்களின் வான்வெளியைத் தவிர மற்ற சவூதி வான்வெளிகள் மற்றும் விமான நிலையங்கள் அனைத்தும் தங்களது இராணுவ நடவடிக்கைகளுக்கான இலக்குகளாக மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகப் பல சர்வதேச விமான நிறுவனங்கள் ரியாத்துக்கான தங்களது சேவைப் பயணங்களை ரத்து செய்தும் இடைநிறுத்தியும் வருகின்றன.

ரியாத் விமான நிலையத் தாக்குதலுக்குப் பிறகு அப்பகுதியில் தீவிர பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்தத் திடீர் தாக்குதல்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளது.

அமெரிக்கத் தூதரகம் தனது குடிமக்களை ரியாத் விமான நிலையப் பகுதிகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ள நிலையில், சவூதி அரேபியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles