பாகிஸ்தானில் இராணுவப் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் இராணுவப் பயிற்சி விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில், விமானி மற்றும் துணை விமானி என இரு இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள இராணுவ முகாமில் இருந்து இன்று திங்கட்கிழமை மதியம் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த சிறிய ரக இராணுவ விமானம், குவெட்டா நகரின் நவான் கில்லி பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதன்போது விமானம் தீப்பற்றி எரிந்ததில் அதில் பயணித்த இருவரும் உடல் கருகி உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக் குழுவினர், உயிரிழந்த இரு இராணுவ வீரர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணைகளின்படி, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், விபத்துக்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles